முகத்தின் அழகை மேம்படுத்த தேனை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்?

தேன் முகம் மற்றும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது.  சருமத்தில் காயம் ஏற்படும்போது அதை குணப்படுத்தவும், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இது முகப்பரு, மந்தமான தோற்றம், வறண்ட சருமம், சீரற்ற சரும பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உதவுகின்றது. 

சர்மத்திற்கும், முகத்துக்கும் தேன் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தது. தோல் தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவும் பண்புகளை கொண்டு இருக்கிறது என்று பல ஆய்வுகள் மூலம் தெரிவிக்கின்றன. இந்த தேனை எப்படி எல்லாம் நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

தேன் சருமத்திற்கு செய்யும் நன்மைகள்:

இன்-விட்ரோ ஆய்வுகள் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளது. தோல் சார்ந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. சருமத்தில்  ஏற்படும் காயத்தை குணப்படுத்தவும் செய்கிறது.

தேனில் உள்ள  நொதிகள், அமினோ அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. இது தீயினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தவும் செய்யும். மேலும் தோலில் ஏற்படும் அலர்ஜி, பொடுகு, டயப்பர் டெர்மடிடிஸ் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும்‌ சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுவதால் வறட்சியான சருமம் இருப்பவர்களுக்கு ஏற்றது.

சருமத்தில் உள்ள பிஹெச் அளவை பராமரிக்கவும் சீராக வைக்கவும் உதவுகிறது. தேனில் இருக்கும் குறைந்த பிஹெச் அளவானது சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கிறது. அதன் வளர்ச்சியையும் தடுக்கிறது. இனி தேனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். ‌‌‌‌

எலுமிச்சையும் தேனும்:

எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்கள் தேனுடன் எலுமிச்சை பயன்படுத்தினால் எண்ணெய் பசை அளவு கட்டுப்படும். முகப்பருக்கள் குறையும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது  சருமத்தில் உணர்திறனை அதிகரிக்கச் செய்கிறது.


எலுமிச்சை சாறுடன் தேன் 2 ஸ்பூன் அளவு எடுத்து நன்றாக கலந்து மென்மையாகும் வரை கலக்கவும். முகத்தை லேசாக சுத்தம்  செய்து உலர வைக்க வேண்டும். இந்த கலவையை கண்களுக்கு கீழ் தடவாமல் முகம் முழுவதும் தடவி அப்படியே ஒரு இருபது நிமிடம் விட்டு விடுங்கள். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் எண்ணெய் பசை உள்ள சருமம் நீங்கும்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்:

முகப் பருக்கள் அதிகமாக இருக்கும் போதும் முகப் பருக்களின் காயங்கள் வடுக்கள் ஆக இருக்கும் போதும் அதன் தீவிரம் குறைய இலவங்கப்பட்டை உதவும். இலவங்கப்பட்டை அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருப்பதால் இது முகப்பருவை மிகவும் முகப்பருவினால் ஏற்படும் காயங்களை ஆற்றவும் செய்கிறது. 


இலவங்கப் பட்டையை பொடித்து ஒரு டீஸ்பூன் தேனில் மூன்று சிட்டிகை கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் மட்டும் வைக்கலாம். முகப்பருவால் ஏற்படும் காயங்கள் அந்த இடத்தில் தடவலாம். பிறகு பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் பருக்கள் நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்தால் போதும். இலவங்கப்பட்டை சிலருக்கு சருமத்தில் எரிச்சல் உண்டாக்கும் என்பதால் இதை தோளில் பயன்படுத்துவதற்கு முன்பு அது சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்குகிறது என்பதை மட்டும் பரிசோதிக்கவும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil