தளபதியின் 'மாஸ்டர்' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடித்து வெளியான படம் 'மாஸ்டர்'. மற்றும் இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஆதலால் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.தெலுங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்துள்ளார்.




தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே 'மாஸ்டர்' வெளியாகி இருக்கிறது.மேலும் மாஸ்டர் படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக, 'மாஸ்டர்' படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குப் பொக்கிஷமாகப் படம் கொடுத்து உதவி புரிந்தமைக்கு நன்றி. இந்த கடினமான காலகட்டத்தில் இவ்வளவு காலம் காத்திருந்து திரையரங்க வெளியீட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளதற்கும் நன்றி என்று தெரிவித்திருந்தனர்.

தற்போது தளபதியின் 'மாஸ்டர்' திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.மாஸ்டர் படத்திற்க்கு, விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் எந்தவொரு குறையுமே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியதாவது “’மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமையாக உள்ளது.தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: | trending news | popular news | movie updates | vijay updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | thalapathy movie updates | cinema updates | tamil cinema updates | trending topics | master movie updates |