அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்.....

தல ரசிகர்களுக்கு பொங்கல் தின சிறப்பு பரிசாக வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.2019 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கிய அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் நடித்திருந்தனர். நேர்க்கொண்ட பார்வை திரைப்படம் அப்படத்தின் இயக்குனரான வினோத்துக்கு நற்பெயரை சம்பாதித்து கொடுத்தது. மேலும் அதை தொடர்ந்து வலிமை படத்தையும் எச்.வினோத் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அஜித் ஐ.பி.எஸ்.அதிகாரியாக நடித்திருக்கிறார்.நடிகர் அஜித் ஐ.பி.எஸ்.அதிகாரி கதாபாத்திரத்திற்காக தனது எடையை குறைத்துள்ளார் அஜித். இத்திரைப்படத்தில் அவரின் பெயர் அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது. 

என்னை அறிந்தால் படத்தில் அப்பா - மகள், 'வேதாளம்' படத்தில் அண்ணன் - தங்கை, 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அப்பா - மகள் என குடும்ப மற்றும் உணர்ச்சிகரமான படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் அஜித்  இந்த முறை அம்மா,மகன் பாசப்பிணப்பை பிரதிப்பளிக்கிறார்.இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹுமா, புல்லட் ஓட்டும் காட்சியும் இடம்பெறுகிறது. இப்படத்திற்காக ஹுமா புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டார்.பைக் ஓட்ட கற்றுக்கொண்டப்பின் மும்பை ரோடுகளில் மகிழ்ச்சியாய் சுற்றி திரிந்திருக்கிறார்.



முன்பு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆபீசர்வேடத்தில் நடித்த கன்னட நடிகர் அச்யுத் குமார், இத்திரைப்படத்தில் அஜித்தின் குடும்பத்தில் ஒருவராக நடித்துள்ளார். அதர்வா நடித்த 100 படத்தின் வில்லன் ராஜ். ஐயப்பன் அஜித்திற்கு தம்பியாக நடித்துள்ளார்.மற்றும் வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் வலிமை படத்தில் நடித்துள்ளனர்.கார்த்தி  நடித்த 'தீரன்' படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் எச். வினோத்.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா  வில்லனாக நடித்துள்ளார்.இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரேமதோ மீ கார்த்தி, ஆர்.எக்ஸ் 100, ஹிப்பி குணா 369, 90 எம்.எல் போன்ற தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.அஜித்தின் தீவிர ரசிகரான கார்த்திகேயா, தன்னுடைய விருப்பமான நடிகருடன் நடிக்க விரும்பி இப்படத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.படத்திற்காக, இவர் பல மாதங்கள் டயட், ஃபிட்னஸ் கண்ட்ரோலில் இருந்து சிக்ஸ் பேக் உடற்கட்டு கொண்டு வந்துள்ளார்.


இப்போது தமிழில் வலிமை படத்தின் மூலம் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடித்து அறிமுகமாக இருக்கிறார்.இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் குழு இப்படத்திலும் பணியாற்றியுள்ளனர்.இத்திரைப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி உள்ளாராம். அப்பாடல் 'ஆலுமா டோலுமா' பாடலைப் போலவே இந்த ஆண்டின் பட்டையை கிளப்பும் பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: | trending news | popular news | movie updates | ajith updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | thala movie updates | cinema updates | tamil cinema updates | trending topics | hilarious news |