உங்க முகம் கலராக ஆகணுமா?

நம் சருமத்தைப் பராமரிக்க தினமும் சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் சரும பராமரிப்புக்கு செய்வதற்கு சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஐஸ் க்யூப் பயன்படுத்துவது தான். பன்னீர் , வெள்ளரிப்பிஞ்சு, உருளைக்கிழங்கை கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ் க்யூப் நல்ல அழகைத் தரும்.

உருளைக் கிழங்கின் சாறு முகத்தில் கரும்புள்ளிகள் போன்றவற்றை வராமல் தடுக்கக் கூடியவை. இந்த உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் தயாரிக்கும் முறையும் பயன்படும் குறித்து அறிந்து கொள்வது உங்கள் அழகை மிகவும் மேம்படுத்த செய்யும். 

உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்:

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு -1

எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்

மாதுளை சாறு-2 டீஸ்பூன்


உருளைக்கிழங்கை நறுக்கி அதனுடைய தோலை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். நீர் விட வேண்டாம். உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் மதுரை சாற்றை சேர்த்துக் கலக்கவும். இதை ஐஸ் கியூபை வைத்து இரண்டு நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு சர்மத்திற்கு நன்மை தரக்கூடியது. உருளைக்கிழங்குடன் மாதுளை சாறும், எலுமிச்சை சாறும் சேர்ப்பதன் மூலமாக சருமத்திற்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கிறது. எந்த வித செயற்கை மூலப்பொருட்களும் இல்லாமல் சுத்தமான ஆர்கானிக் முறையில் ஆன இந்த சரும பராமரிப்பு செய்யும் நன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் எப்படியெல்லாம் பயன்படுத்துவது:

உருளைக்கிழங்கு ஐஸ்கட்டியை சருமத்திற்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடியது என்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதை நேரடியாக சருமத்தின் மீது வைக்கவும் கூடாது. ஐஸ் கியூபை மென்மையான பருத்தி துணியில் வைத்து அதை முகத்தில் ஒத்தடம் கொடுக்கவும். 

ஒரு ஐஸ் கியூபை எடுத்து முகம் முதல் கழுத்துவரை கீழிருந்து மேலாக எடுத்து தடவிக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் போதும். ஒவ்வொரு முறை இந்த ஐஸ் கியூபை பயன்படுத்திய பிறகு சுத்தமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். இப்படி செய்து வந்தால் முகம் நன்றாக பளபளவென்று இருக்கும்.

சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்:

இயற்கையாக ப்ளீச்சிங் போன்ற செயல்படும் உருளைக்கிழங்கு சருமத்தில் இழந்த நிறத்தை மீட்டு எடுக்க பளிச் தோற்றத்தை, நிறத்தை தருகிறது. சருமம் பிரகாசமாக ஜொலிக்க உதவுகிறது. கூடுதலாக இதில் சேர்க்கும் எலுமிச்சை சாறும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. தினசரி இதை பயன்படுத்தி வருவதால் விரைவாகவே சருமம் நிறம் மாறுபட்டு நல்ல நிறத்தை தருகிறது. 

சருமத்தின் நிறத்தை தெளிவாக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்:

சருமத்தை தோல் தூசி மற்றும் வெயிலினால் அதிகம் பாதிப்படையும். அப்போது முகம் அதிகமான பொலிவை இழக்க கூடும் சில சமயங்களில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாமல் மந்தமாக இருக்கும். இதை சரி செய்ய முதலில் உருளைக் கிழங்கில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 

உருளைக்கிழங்கின் சாறை சருமத்தின் உள்ளே சென்று முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி கருந்திட்டுகள், சருமத்துளைகள், முகப் பருக்கள், வடுக்கள் ,தழும்புகள் போன்ற அனைத்தையும் மறையச் செய்கிறது. உருளைக்கிழங்கு பயன்படுத்தி சில நாட்களிலேயே முகத்தில் நன்றாக வித்தியாசம் தெரியும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil