லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளிய பெங்களூரு .. இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை..!

பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை 2020ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தை எதிர்கொண்ட நிலையில், பெரிய அளவிலான பாதிப்பு அடையாமல் ஐடித் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரு,  உலகின் முன்னணி டெக் நகரங்களை ஓரம்கட்டிவிட்டு, உலகின் வேகமாக வளரும் டெக் நகரமாக மாறியுள்ளது.

 
இந்திய ஐடி துறை நிறுவனம்:
 இந்தியாவும், இந்திய ஐடி நிறுவனங்களும்  ஐடி சேவை துறையில், தவிர்க்க முடியாத இடத்தை அடைந்துள்ள நிலையில்,  தொடர்ந்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று இந்திய ஐடி நிறுவனங்கள் உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளன.

மிக வேகமாக வளரும் பெங்களூரு: 
உலகிலேயே வேகமாக வளரும் டெக் ஹப்- ஆகப் பெங்களூரு நகரம் உயர்ந்துள்ளது காரணம் , இந்த அதிரடி விரிவாக்கம் மற்றும் தொடர் வளர்ச்சி ஆகும். இது இந்திய ஐடி ஊழியர்களுக்கும்,  ஐடி துறைக்கும் பெருமையாக திகழும் ஒரு விஷயமாகும்.
 

டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த டெக் நகரங்கள்:
 பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்த நிலையில், லண்டன், முனிச், பெர்லின், பாரிஸ் ஆகிய நகரங்கள் அடுத்த 4 இடத்தைப் பிடித்து டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.  இந்தியாவின் நிதியியல் தலைநகரான மும்பை 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதிரடி வளர்ச்சி கண்ட பெங்களூரு:
பெங்களூரு  முதல் இடத்தைப் பிடித்த நிலையில் 2016ல் இருந்து முதல் இடத்தில் தான்  இருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.  பெங்களூரு நகரத்தின் டெக் சந்தை மதிப்பு 2016ல் வெறும் 1.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில்  2020ல் 5.4 மடங்கு அதிகரித்து 7.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
 

லண்டணின்  வளர்ச்சி:
 லண்டன் டெக் சந்தை மதிப்பு  2016 முதல் 2020 காலகட்டத்தில் 3.5 பில்லியன் டாலரில் இருந்து 10.5 பில்லியன் டாலர் வரை உயர்ந்து 3.2 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது.   இக்காலகட்டத்தில் மும்பை பங்கு சந்தை  0.7 பில்லியன் டாலரில் இருந்து 1.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:  Bangalore it company | level of it company in bangalore | proud of it company | top 5 tech companyLatest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil