அலிபாபா மூடும் Xiami நிறுவனம்.. இது சீன அரசின் உத்தரவா..?!

சீன அரசு மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா மீது  தற்போது மோனோபோலி வழக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் தனது மிகப்பெரிய கனவுத் திட்டமான பொழுதுபோக்கு துறை வர்த்தகத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. சீன அரசின் அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகளும், நெருக்கடியும் தான் அலிபாபாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. சீன அரசு ஆன்ட் குரூப் ஐபிஓ மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியைப் பல வழிகளில் முடங்கியுள்ளது. தற்போது அலிபாபா வளர்ச்சியை முடக்க வேண்டும் என்றும்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

அலிபாபா நிறுவனத்தின் அதிரடி முடிவு:

 சீன அரசு மோனோபோலி வழக்கு மூலம் அலிபாபா நிறுவனத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், எண்ட்டெயின்மென்ட் துறைக்குள் நுழைந்து பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு அலிபாபா நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

  

XIAMI மியூசிக் செயலி நிறுவனம்  மூடல்:

பொழுதுபோக்கு துறைக்குள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்ட அலிபாபா 2013ஆம் ஆண்டு XIAMI எனும் பிரபலமான மியூசிக் செயலி நிறுவனத்தைக் வாங்கியது அலிபாபா. இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவை அலிபாபா கைப்பற்றலுக்குப் பின் மில்லியன் டாலர் முதலீட்டில் வளர்ச்சி அடைந்தது.   இந்தச் செயலியை எவ்விதமான நிதிநெருக்கடியும் இல்லாத போது வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 

அலிபாபாவின் இசை வர்த்தகப் பிரிவு:

சீனாவின் மிகவும் பிரபலமான சமுக வலைதளமான வெய்போ தளத்தில் இதுகுறித்த அறிவிப்பை அலிபாபாவின் இசை வர்த்தகப் பிரிவு தெரிவித்தது.  சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வர்த்தகத்தைப் XIAMI செயலி பெறவில்லை என்றாலும் சீன இசை வர்த்தகச் சந்தையில் சுமார் 2 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது.

ஆன்ட் குரூப்_-அலிபாபா:

அலிபாபா குழுமம் 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம்  தனது நிதியியல் வர்த்தகப் பிரிவான ஆன்ட் குரூப்-ஐ தனது ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைத்து ஒரு வங்கியைப் போலவே செயல்படத் திட்டமிட்டுள்ளது . ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டதுள்ளது என்னவென்றால்  வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

 

மோனோபோலி வழக்கு மூலம் தனது கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வந்தது சீனா :

 சீன அரசு மோனோபோலி வழக்கு விதித்து இந்நிறுவனத்தின் மீது மொத்த நிறுவனம் மற்றும் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து நிறுவனத்தின் மதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. சீனா, அமெரிக்கா பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 3 மாதத்தில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.

 

வர்த்தகத் தடை:

 சீன மத்திய வங்கியான People Bank டிசம்பர் மாதம் அலிபாபாவின் ஆன்ட் குரூப் நிறுவனத்தைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், விதிமுறைகளுக்குப் உட்பட்டும்  பேமெண்ட் சேவைகள் அளிக்கும்படி எச்சரித்துள்ளது. ஆன்ட் குரூப்-ன்  சொத்து மேலாண்மை வர்த்தகம் மற்றும் நுகர்வோர் கடன் போன்றவற்றை  கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியைக் குறைத்துள்ளது.

 

அலிபாபா பாவமான நிலை:

 அலிபாபா மற்றும் ஆன்ட் குரூப் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சியை முடக்கும் வகையில் சீன அரசின் இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளது.  சீனாவில் உள்ள  மிகவும் லாபகரமான நிறுவனங்கள் நெருக்கடியில் தள்ளப்படும் என சக டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்,முதலீட்டாளர்கள், டெக் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறது. ஆனால் அரசை எதிர்த்து எவ்விதமான கருத்துக்களையும் சீனாவில் தெரிவிக்க முடியாது.

 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:  alibaba news india |  | alibaba news release | batx china | alibaba china | xiami  niruvanam | alibaba moodum xiami  niruvanam | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil