நானே வருவேன் -தனுஷ் நடிக்கும் புதிய படம்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அந்த படத்தின் போஸ்டரும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டுகிறது.தனுஷை வைத்து செல்வராகவன் எப்போது இயக்குவார் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்தனர்.அதற்கு விருந்தளிக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் அறிவிட்டுள்ளார்.அந்த படம் 2024 ம் ஆண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் நிறைய இருக்கிறது எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்காத நடிகர் தனுஷ் எப்படி அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என சிலர் கேள்வி எழுப்பினர்.மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து மேலும் ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள்.கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அந்த படத்தை எஸ்12 என்று அழைத்தார்கள். எஸ்12 பற்றிய புதிய அறிவிப்பு வரும் என்று செல்வராகவன் நேற்று ட்வீட் செய்துள்ளார்.ஆனால் தற்போது எஸ்12 படத்தின் டைட்டில் போஸ்டர் ஜனவரி 14ம் தேதி இரவு 7.10 மணிக்கு வெளியிடப்படும் என செல்வராகவன் அறிவித்துள்ளார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tags: | trending news | popular news | movie updates | dhanush updates | latest news | interesting news | kollywood news | daily updates | recent updates | selvaraagavan updates | celebrity news | all india news in tamil |