இந்தியர்கள் கண்ணீர்..ஏன்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..! புதிய ஹெச்1பி விசா தேர்வு முறை....!

வெளிநாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும்  லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், இதன் இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்னவென்றால் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு விசா வழங்கும் முறையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் அறிவுறுத்தியுள்ளது.  இனி ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் இப்புதிய வரைமுறையின் கீழ் தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

டிரம்ப்புக்கு சாதகமான தீர்ப்பு:

 புதிய ஊதிய அடிப்படையிலான ஹெச்1பி விசா வழங்கும் முறையை டிரம்ப் அரசு எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், டிரம்ப் அரசுக்குச் இந்த வழக்கானது  சாதகமானத் தீர்ப்பாக அமைந்தது. அரசு அமைப்புகள்  இப்புதிய கொள்கையை  கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

செக்யூரிட்டி அமைப்பான ஹோம்லேண்டு:

 அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பானது  ஊதியம் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு, புதிய விசா வழங்கும் முறையையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் வடிவமைக்குமாறு  அறிவுறுத்தியுள்ளது. இக்கொள்கை  விரைவில் அமலாக்கம் செய்வதாக உள்ளது.

 

புதிய கொள்கை (விசா எந்த முறையில் வழங்குவார்கள்):

 ஒருவரின் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், இப்புதிய கொள்கையின் கீழ் Level 1 (entry level), Level 2 (qualified), Level 3 (experienced), Level 4 (fully competent) என நான்கு பிரிவுகளின் கீழ் விசா விண்ணப்பங்களைப் பிரிக்கும். விசா எப்படி  வழங்குவார்கள் என்றால் இந்தப் பிரிவின் கீழ் இருக்கும் விசா விண்ணப்பங்களை அமெரிக்காவின் ஊழியர்கள் தரவுகளின் சம்பளத்தை முதன்மையாகக் கொண்டு   வழங்குவார்கள்.

 

பிற நாடுகளை விட இந்தியர்களுக்கு ஏன் பாதிப்பு:

 பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சம்பள அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும், திறமை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் பிற நாடுகளைக் காட்டிலும்  இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்களைப் பணியில் சேர்த்து வருகிறார்கள்.

அதிக ஊதியம்:

 இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது, ஏனென்றால் இப்புதிய கொள்கையால் அதிகச் சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்ற  காரணத்தால்.  துவக்க நிலையில் உள்ள ஐடி துறை ஊழியர்களுக்குக்கு கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அயல்நாட்டு  மாணவர்கள்:

 அமெரிக்க அரசு எதிர்கொண்ட மிகவும் கடுமையான விமர்சனம் என்னவென்றால்,  அனைத்து  தடைகளையும்  தாண்டி வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் லெவல் 1  என்டரி பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் பெரிய அளவிலான வாய்ப்புகளை இழக்கிறார்கள் . 

அமெரிக்காவின் அதிரடி பதில்:

  அமெரிக்க அரசின் கீழ் தனது கல்லூரி படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமான  3 வருட OPT காலத்தின் வாயிலாக அதிகச் சம்பளம் பெறும் லெவல் 3 அல்லது 4வது பிரிவுக்குச் செல்ல முடியும் என்று அமெரிக்க அரசு பதில் அளித்துள்ளது.

 

ஜோ பிடன் அரசை நம்பிய இந்திய அரசு:

 புதிதாக அமைய உள்ள இந்த விதிமுறையை பிடன் அரசால் கண்டிப்பாக ரத்து செய்யவோ அல்லது மறுசீரமைப்புச் செய்து அனைவருக்குமான வாய்ப்புகளை அளிக்க முடியும்.  இந்திய அரசுக்கு ஜோ பிடன் அரசானது மிகவும் சாதகமாக இருக்கும் எனப் பெரிய அளவில் நம்பப்படும் நிலையிலும், இந்த விசா முறையும் ரத்து செய்யப்படும் எனவும் நம்பப்படுகிறது.

புதிதாக உருவாகிய  பிரச்சனை:

  அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய விசா கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதால் மட்டுமே தற்போது புதிய விசா கொள்கை அமலாக்கம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: h1b visa requirements | h1b visa upsc | h1b visa 2020 | h1b visa news | h1b visa salary | h1b visa validity | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil