இளநரையா இனிமே ஹேர் டை வேண்டாம். நான் சொல்ற டிப்ஸ் பாலோ பண்ணா போதும்.....

இளநரை காதோரங்களில் வரத் தொடங்கும் போதே கவனித்து விடுங்கள். இரண்டு, மூன்று முடி தெரியும் போதே அதை போக்க நல்ல சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.  அப்போதுதான் இளநரை மறையும்.  

பல நேரங்களில் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு முடி நரைத்து இருந்தால் கூட கூந்தல் முழுவதும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.  ஹார் டை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாக இருக்கும் நம் முடியின் நிறமும் நாளடைவில் மாறிவிடுகிறது. உங்களுக்கு இளநரை இருப்பதை நீங்கள் கண்டால் ஹேர் டை போடுவதைத் தவிர்த்து முதலில் இயற்கையான முறையை கையாளுங்கள். 

இளநரை:

இளநரை என்பது பொதுவாக இளம் வயதில் உண்டாகக் கூடியது. வயதான பிறகு வரக்கூடிய இளநரை என்பது இயல்பானது. ஆனால் சிறு வயதிலேயே இளநரை வருவது என்பது மிகவும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உடலில் மெலனின் என்ற நிறமிப் குறைவதால் தான் நம் தலையில் இளநரை ஏற்படுகிறது. முடியின் நிறத்தை மீட்டெடுக்க பல சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டை வகைகளை தற்காலிகமாக இழந்த நிறத்தை மீட்டு எடுக்க உதவுகிறது. இது செயற்கையான முறை என்பதால் ஆரோக்கியம் மிகவும் பாதிப்படைகிறது. நம் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் போதும். இளநரையை கவனித்து ஆரம்பத்தில் செய்யக்கூடிய எளிமையான பராமரிப்பு முறைகளை கையாண்டால் இளநரைக்கு குட்பை சொல்லலாம்.

உருளைக்கிழங்கின் தோல்:

நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கின் தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கின் தோலை தூக்கி எறியாமல் அதை கூந்தல் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கின் தோலில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இது முடியின் நிறத்தை பாதுகாத்து இயற்கையான நிறத்தை தருகிறது. ஆனால் இது விரைவில் பலன் தராது. தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருந்தால் தான் சாம்பல் நிறத்தில் இருக்கும் முடியை மறைக்க செய்யும். 


உருளைக்கிழங்கின் தோலை எடுத்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக கொதித்ததும் அதை இறக்கி உருளைக்கிழங்கைத் தோல் வேக வைத்த நீரை வடிகட்டவும். இதை கூந்தலின் வேர்ப் பகுதியில் தடவி குறிப்பாக இளநரை இருக்கும் இடத்தில் 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள். 

நெய்:

கூந்தல் நிறத்தை மீட்டெடுக்க நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய் முடியின் நிறத்தை பராமரிக்க உதவுகிறது. நெய் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இயற்கையான நிறத்தை அளிக்கவும் உதவுகிறது. 


நீங்கள் பயன்படுத்தும் நெய் முதலில் தரமானதாக இருக்க வேண்டும். இதை லேசாக சூடு செய்து கூந்தலின் குறிப்பாக இளநரை இருக்கும் இடங்களில் ஒரு மணி நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கூந்தலை அலசி கொள்ளவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

காஃபி:

இளநரையை மீட்டெடுக்க காஃபி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரணமாகவே நம் கூந்தலின் நிறத்தைப் இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதற்கு காஃபி உதவுகிறது. இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்வீர்கள். 


நல்ல தரமான காஃபி தூளை பார்த்து வாங்கி கொள்ளுங்கள். உங்கள் கூந்தலுக்கேற்ற 3 ஸ்பூன் அளவு காபி தூள் எடுத்து 150 மில்லி தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக கொதிக்க வைத்து பிறகு இறக்கி ஆறவிடுங்கள். இவை குளிர்ந்த பிறகு உங்கள் கூந்தலில் தடவி மசாஜ் செய்யுங்கள். நரை முடி இருக்கும் பகுதியில் நஞ்சாக இரண்டு அல்லது மூன்று முறை தடவி முடியை 50 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை அலசுங்கள்.

நெல்லிக்காய்:

சாதாரணமாகவே நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அதிலும் சிறப்பாக இளநரையை போக்குவதில் நெல்லிக்காய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி நன்றாக வளர்வதற்கு, சேதமடைந்த முடியை நீக்குவதற்கும் நெல்லிக்காய் சிறப்பாக உதவுகிறது.   


ஹேர் டை பயன்பாட்டிலும் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடியின் நிறத்தை மாற்ற இயற்கையாக நமக்கு கிடைத்த பொருள் நெல்லிக்காய் ஆகும். இது பாதுகாப்பானதும் கூட. நெல்லிக்காய் கூந்தல் இளநரையை தடுப்பதோடு, இளநரை வராமல் இருக்கவும் செய்கிறது.

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் காய வைத்த நெல்லிக்காய் தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும் அந்த எண்ணெய் கூந்தல் முழுக்க மயிர்கால் பகுதியில் தடவி 40 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி கொள்ளுங்கள். உங்களுக்கு இளநரை அதிகமாக இருந்தால் தாமதிக்காமல் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil