SBI வங்கியில் மாற்றம் என்ன? புதிய செக்(cheque) விதிகள்... விவரம் என்ன..? விரிவாக பார்க்கலாம் வாங்க..!
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india) நாட்டின் மிகப்பெரிய வங்கியாக செய்யப்பட்டு வருகிறது. இது தனது புதிய காசோலை (cheque) விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ல் இருந்து தான் ரிசர்வ் வங்கி புதிய காசோலைகளுக்கான விதிகளை மாற்றம் செய்தது. அதனடிப்படையில் தனது காசோலை விதிகளை எஸ்பிஐ மாற்றம் செய்துள்ளது
ரிசர்வ் வங்கி என்ன வெளியிட்டுள்ளது?
என்னென்ன மாற்றங்களையெல்லாம் ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ அதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தது என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் படி, இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். வாடிக்கையாளரின் விருப்பப்படி இதை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.
ரிசர்வ் வங்கியின் புதிய செக் விதிமுறைகள்:
காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த விதிமுறைகள் உதவும். ஏனெனில் வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக காசோலையை வழங்குபவர், காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை வழங்கலாம்.
நடவடிக்கை தேவையான நேரத்தில் எடுக்கப்படும்:
காசோலை செலுத்தும் முன்பாகவே மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதாவது தகவல் மிஸ்மேட்ச் (அ ) வித்தியாசம் ஆனால், அந்த பரிவர்த்தனை நிறுத்தப்படும். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கட்டாயமாகலாம் என்ற விதிமுறைகள்:
காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட காசோலைகளுக்கும் இந்த விதிமுறைகளை வங்கிகள் கட்டாயமாக்கலாம்.
சி.டி.எஸ்ஸின் பாசிட்டிவ் பே சிஸ்டம்:
சி.டி.எஸ்ஸில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்ககுமாறு செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். வங்கிகளானது அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இதை நடைமுறைப்படுத்தும். வங்கிகளில் விளம்பரம் செய்தல், எஸ்எம்எஸ் போன்றவை வழியாக இந்த முறை குறித்து, தங்கள் வாடிக்கையாளர்களிடையே வங்கிகள் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
எஸ்பிஐ அதிக மதிப்புடைய காசோலைகள் குறித்தான விவரங்களை,ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். எஸ் எம் எஸ், மொபைல் ஆஃப், இணைய வங்கி, ஏடிஎம்களில் காசோலையை வழங்குபவர் இது குறித்து தகவல்களை தெரிவிக்கலாம். பின்பு காசோலை கொடுப்பவர் கொடுத்த விவரங்களையும், பணம் எடுப்பவர்களின் விவரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பார்க்கப்படும். எஸ்பிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது என்னவென்றால், விசாரணை செய்யும் போது, விவரங்கள் எதுவும் தவறாக இருந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags: bank details | save income fund | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil