இபிஎப் கணக்கில் வங்கி கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்....! இனி எங்கும் அலையத் தேவையில்லை...!

உங்களது வங்கி கணக்கில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி அப்டேட் செய்வது. இன்றைய காலகட்டத்தின் பிரச்சினையாக எதிர்கொள்வது இதுதான்.பிஎஃப் கணக்கில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமென்றால் நாம் பிஎஃப் அலுவலகம் சென்று மாற்ற வேண்டும். ஆனால் இன்று ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.

யாருடைய உதவியும் இல்லாமல் தங்களது வங்கி கணக்குகள் உட்பட பல விவரங்களை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். நாம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்று சிலருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி அப்டேட் செய்வது வாருங்கள் பார்க்கலாம். 


உங்கள் கணக்கை லாகின் செய்யுங்கள்:
 உங்களது வங்கி கணக்கை அப்டேட் செய்ய  https:unified portal-emp.epfindia.gov.in/epfo என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்யவும். மேனேஜ் என்பதை கிளிக் செய்து பின்பு கேஒய்சீயை கிளிக் செய்ய வேண்டும்.



வங்கி கணக்கினை மாற்றுவது எப்படி?
உங்களது வங்கி கணக்கை  கிளிக் செய்து  வங்கி கணக்கு நம்பரை பதிவு செய்து பின்பு ஐஎப்எஸ்சி, உங்களது பெயர் போன்றவற்றை பதவிட்டு பிறகு சேமிக்கவும். வெற்றிகரமாக  நீங்கள் ஒருமுறை அப்டேட்  செய்து விட்டால் உங்களது கேஒய்சியிலும்  வங்கிகணக்கு மாறிவிடும்.

பிஎஃப் கணக்கில் உங்கள் தொகையை பற்றி எப்படி தெரிந்து கொள்வது?
உமாங் ஆப் மூலம் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை தெரிந்துகொள்ளலாம்.  சேவா போர்டல் மூலமும் எஸ்எம்எஸ் மூலமும், மிஸ்டு கால் மூலமும் EPFO உறுப்பினர் அறிந்து கொள்ள முடியும்.

எப்படி தெரிந்து கொள்ள முடியும் உமாங் ஆப் மூலம்?
உமாங் ஆப் பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை மொபைல் மூலமாக பார்த்துக்கொள்ளலாம். உமாங் ஆப்என்பது அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்டது.EPF பாஸ் புத்தகத்தையும் இந்த ஆப் மூலம் பெறலாம். வங்கி இருப்பினையும் தெரிந்துகொள்ளலாம். 

EPFO PORTAL மூலம் எப்படி தெரிந்து கொள்வது?
தொழிலாளர்கள் unified portal   பதிலாக மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும்.www.epfindia.gov.in என்ற இணையதளத்திலும் தொழிலாளர்கள் பாஸ் புத்தகம் இருக்கும். Our service என்ற லிங்கினை இந்த இணையதளத்தில் கிளிக் செய்து for employees என்ற ஆப்சனை கிளிக் செய்யவும் பின்பு மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்த யுஏஎன் நம்பர் பாஸ்வேர்டு ஐ கொடுத்து லாகின் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் பெற முடியும். வருங்கால வைப்பு நிதியை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்:
நீங்கள் உங்களது வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள்  மொழியினை தேர்வு செய்ய இந்த மொபைல் எண்ணிக்கு EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் இதில் அடங்கும்.

உறுதி செய்து கொள்ளுங்கள்:
பதிவுகளின் கிடைக்கும் உறுப்பினர்களின் விபரங்களையும் EPFO அனுப்புகிறது. உங்களது யுஏஎன் எண், ஆதார் எண்,பேன் வங்கி கணக்கின் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம்:
நீங்கள் உங்களது யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம்.  உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்சமையல் குறிப்புகள்அழகு குறிப்புதமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: epfo unified portal | epfo member portal | epf passbook | umang app details | bank details | save income fund | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil