40 வயசுக்குமேல் எடை குறைக்க நினைக்கறவங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

நீங்கள் ஆரோக்கியமாக சீராக இருக்க விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். உங்க உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற தாவர அடிப்படையிலான உணவைத் தேர்வு செய்தல் நல்லது. நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின்கள் அவசியம். குறிப்பாக எடை இழப்பில் இந்த விட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான காலத்தில் நம்மால் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க சில விட்டமின்களை எடுத்துக் கொள்கின்றனர்.


விட்டமின் பி சத்துக்கள் நிறைந்த உணவுகள்:

உங்கள் ஆற்றல் அளவுகள்,வளர்சிதை மாற்றம் மற்றும் மனநிலையை பொருத்தே அதிகரிக்கும். இவை உங்க எடை இழப்பு திட்டத்தில் நீண்ட காலம் ஒட்டிக் கொள்ள உதவுகிறது.இதில் விட்டமின் பியை நீங்கள் காலை வேளையில் சேர்க்க வேண்டும். ஏனெனில் பி விட்டமின்கள் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமானதாகும்.இந்த விட்டமின் பி குறைபாடு இருந்தால் மன அழுத்தம் மற்றும் சோம்பலை  உண்டாகுகிறது, இவை இரண்டும் உங்கள் உடலை அதிக கொழுப்பைச் சேமிக்கின்றன.

​மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த  உணவுகள்:

மக்னீசியம் உங்க உடல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்னீசியம் உங்க சீரணத்திற்கு உதவக்கூடியது. இதில் வளர்ச்சிதை மாற்ற பண்புகள் உள்ளன. உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உண்ணும் போது உங்க ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும் முக்கியமானது.


விட்டமின் டி நிறைந்த  உணவுகள்:

விட்டமின் டி இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. விட்டமின் டி நமது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அழற்சி விளைவுக்கு எதிராக செயல்பட மிகவும் அவசியம். மக்னீசியம் செரிமானத்தின் தரம் மற்றும் எடை இழப்புக்கு உடல் ரீதியான மறுசீரமைப்பை கொண்டு வர உதவுகிறது.

க்ரீன் டீ /எல் - தியானைன்:

எடை இழப்பை பெற முதலில் வீக்கம் மற்றும் அழற்சியை சரி செய்ய வேண்டும். க்ரீன் டீ மாத்திரைகள் மன அழுத்தம் தொடர்பான அழற்சியை குறைக்க பயன்படுகிறது. இது நீங்கள் இலகுவாகவும் எடை இழப்பு மாற்றங்களை பெறவும் உதவி செய்கிறது. க்ரீன் டீ குறிப்பாக எல் - தியானைன் உடன் செயல்படுகிறது. எனவே 40 க்கு மேல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் டீயை எடுத்துக் கொண்டு வரலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

 

Tags: how to lose weight at home without exercise | how to lose weight at home in 7 days | how to lose weight naturally at home remedy | how to lose weight in 7 days | how to reduce weight at home | home remedies for weight loss in 2 weeks | how to lose weight fast in 2 weeks | how to lose weight at home with exercise | fitness | Diet |