அத்திப்பழத்தில் இவ்வளவு சத்துக்களா !!!!!

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. எலும்பு பலவீனமடைய கால்சியம் சத்து அவசியம். அத்திபழத்தில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தொண்டை புண் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வரவேண்டும். உலர்ந்த அத்திப்பழத்தை நம் கண்களுக்கு தேவையான விட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து இரண்டு அல்லது மூன்று ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

அத்திப்பழங்களில்  சத்துக்கள் என்ன?

அத்தி பழங்களில் என்னென்ன விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன என்று முதலில் காண்போம்.

  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் பி
  • வைட்டமின் கே
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • இரும்புச்சத்து
  • காப்பர்
  • ஜிங்க்
  • மான்கனீஸ்

உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

தலைமுடி வளர்ச்சி சிறப்படையும்:

அத்தி பழத்தில் நிறைந்துள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ சத்து மூடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் சத்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். அத்தி பழங்களைச் சாப்பிடுவோருக்கு முடியின் நீளம் அதிகரிக்கும் என்பது உறுதி.


கண்பார்வை சிறக்கும்:

அத்தி பழங்களில் கண்களுக்கு அவசியமான விட்டமின் ஏ ,நிக்கோடினிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அதிகளவு  காணப்படுகின்றது. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் கண் வளம் மேம்படும். குறிப்பாகக் குழந்தைகளின் கண்பார்வை சிறப்பாக இருக்க  அவர்களுக்கு இந்த பழங்களைத் தினமும் சாப்பிடத் தருவது மிகவும் நல்லது.


எலும்புகள் பலமடையும்:

இந்த பழங்களில் கால்சியம் சத்து உள்ளது.ஆக அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் பலமடையும். மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குணமடையும்.



tag: athi palam in english | athipalam benefits for pregnancy in tamil | athi fruit benefits in tamil |athipalam side effects in tamil | athipalam price | athi palam maram | athi pazham price | athipalam juice in tamil | athipalam juice benefits in tamil | athipalam benefits for skin in tamil | athipalam benefits for pregnancy in tamil | athi pazham health benefits in tamil | athipalam dry fruit benefits tamil |