வங்கி சேவையை பெற வாட்ஸ்அப் இருந்தா போதும்....வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி ....!

நாளுக்கு நாள் டிஜிட்டல் வளர்ச்சி வளர்ந்து வரும் நிலையில், வங்கித் துறையிலும் பெரும் வளர்ச்சி  கண்டு வருகிறது. சில வங்கிகள் தனது வங்கிச் சேவையை வாட்ஸ்அப் மூலம் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக பேங்க் ஆப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதை பார்ப்போம்.வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த வாட்ஸ்அப் மூலம் சேவைகளை பெற முடியும். 


வாட்ஸ்அப் சேவை வாடிக்கையாளர் அல்லாதவருக்கும்:

வாடிக்கையாளர்கள் பெற கூடிய சேவை வழக்கமாக ஒரு சேவை தான். ஆனால் வாடிக்கையாளர் அல்லாதவரும் சேவையை பெற முடியும் என்றால் அது புதியதாக உள்ளதே எப்படி? வாருங்கள் பார்ப்போம் இந்த சேவையை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்று 

வாட்ஸ்அப் எண்: 

வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவருக்கும் பேங்க் ஆப் பரோடாவின்  வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை பெற, உங்கள் தொலைபேசியில் பேங்க் ஆப் பரோடாவின் வாட்ஸ்அப் நம்பரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் எண் 84 33 888 777

என்ன சேவையெல்லாம் இதில் பெற முடியும் ?

வாட்ஸ்அப் வங்கி சேவையின் மூலம் உங்களது காசோலை நிலை விசாரணை, வங்கி இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட், செக்புக் கோரிக்கை, வங்கியின் தயாரிப்பு மற்றும் சேவைகள் குறித்த தகவல்கள், டெபிட் கார்டை பிலாக் செய்வது போன்றவற்றை இதன் மூலம் பலன் பெறலாம்.



வாடிக்கையாளர்களின் பயன் :

சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இவ்வங்கி இயக்குனரான குரானா எளிய மற்றும் புதுமையான வங்கி தீர்வுகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எளிதான அணுகல் மற்றும் அனைத்து  வாடிக்கையாளர்களுக்கு, வசதிகளுக்கும் இவ்வங்கி சேவையானது பயன்படும்.

ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டில் சேவை :


வங்கி சேவை  ஆன்ட்ராய்டு (ம ) ஐபோன் இரண்டிற்கும் கிடைக்கிறது. பரோடா வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் வங்கி தொடர்பான எந்த ஒரு கேள்விகளுக்கும் அணுகலாம்.

எப்படி சேவை பெறுவது ?

பரோடாவின் வாட்ஸ்அப் எண் 84 33 888 777 ஐ உங்கள் மொபைல் சேமித்து பின்பு வாட்ஸ்அப்பை பயன்படுத்தி hi என்ற செய்தியில் இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இந்த சேவை மூலம் நீங்கள் பல வங்கிகளில் 24 மணி நேரமும் சேவையை பெற முடியும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்சமையல் குறிப்புகள்அழகு குறிப்புதமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags: how to get whatsapp payment | is whatsapp payment available in india | whatsapp payment invite link 2020 | whatsapp payment option not showing android | whatsapp payment apk | whatsapp payment app |whatsapp payment feature in india |whatsapp payment update version | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil