கே.ஜி.எஃப். 2 டீஸர்- யூடியூபில் புது சாதனை....

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப்.படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.பிரபாஸுக்கு ஒரு பாகுபலி போன்று யஷுக்கு கே.ஜி.எஃப். படம் அமைந்தது.அந்த படம் மூலம் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார்.இதையடுத்து கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். ராக்கி பாயை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். யஷ் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி கே.ஜி.எஃப். 2 படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

டீஸர் வெளியான சில மணிநேரத்தில் அதற்கு யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற இந்திய பட டீஸர் என்கிற பெருமையை கே.ஜி.எஃப். 2 பெற்றுள்ளது.கே.ஜி.எஃப். 2 டீஸரில் யஷ் கெத்து காட்டுகிறார். கே.ஜி.எஃப். படத்தை போன்றே அதன் இரண்டாம் பாகமும் சிறப்பாக இருக்கும் என்பது டீஸரை பார்த்தாலே தெரிகிறது. ராக்கி பாய்க்கு ஒரு ஹிட் பார்சல். டீஸருக்கே இந்த அளவுக்கு வரவேற்பு என்றால், படத்திற்கு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


பிறந்தநாள் கொண்டாடும் யஷுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கே.ஜி.எஃப். 2 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். தன் கெரியரில் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என்று சஞ்சய் தத் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவர் நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்பிய பிறகு கே.ஜி.எஃப். 2 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு தான் வரும் காட்சிகளை நடித்துக் கொடுத்தார். ராக்கி பாய்க்காக கன்னட ரசிகர்கள் மட்டும் அல்ல அனைத்து மொழி சினிமா ரசிகர்களும் மரண வெயிட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: latest news | trending news |  celebrity news in Tamil | day to day updates |  cinema news in Tamil | interesting news in Tamil | popular cine news | kgf teaser | popular teaser | yash teaser | mass teaser | kgf movie updates | daily updates |