நெகட்டிவ் பாத்திரத்தில் நடிக்கும் சமந்தா!!!

சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னனி நடிகையில் ஒருவர்.சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு.இவர் சென்னை தில்லைநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், அதன்பின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்  வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.பின்னர்  கெளதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார் சமந்தா.

'மாஸ்கோவின் காவிரி' என்ற திரைப்படத்தின் மூலம் 2007ஆம் ஆண்டு முதன்முதலாக நடிக்கத் தொடங்கினாலும் தெலுங்குத் திரைப்படமான 'ஏ மாயா சேசவா' முதலில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தது.இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் சமந்தாவுக்கு கிடைத்தது.

இந்தப் படத்தின் தமிழ் பதிப்புதான் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. பின்னர் மாஸ்கோவின் காவிரி 2010ல் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். ரவி வர்மாவின் இயக்கத்தில் ராகுல் ரவீந்திரன், சமந்தா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்தனர். கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்வரிகளுக்கு தமன் இசையமைத்திருந்தார்.


இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி மற்றும் கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் நல்ல வரவேற்பை பெற்றார். 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.மேலும் தற்போது நடிகை சமந்தா நடித்துள்ள வலை தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags:  latest news | trending news |  celebrity news in Tamil | day to day updates |  cinema news in Tamil | interesting news in Tamil | samantha updates | popular news | samantha updates | popular news in tamil | daily updates | upcoming news |