மாறா படத்தின் விமர்சனம் !!!!!!!

கடந்த 2015ம் ஆண்டு துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான மலையாள படமான சார்லியின் ரீமேக் தான் மாறா.தான் சிறுமியாக இருந்தபோது கேட்ட கதையை கேரளாவில் இருக்கும் மீனவ கிராமத்தின் சுவர்களில் ஓவியமாக பார்க்கிறார் பார்வதி.வேலை விஷயமாக அந்த ஊருக்கு சென்ற இடத்தில் ஓவியங்களை பார்த்து வியக்கும் பாரு அதை வரைந்த மாறாவை நாடி செல்கிறார்.

வித்தியாசமான ஓவியரான மாறா பலரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.துல்கர் நடித்த சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் பார்ப்போரை ரசிக்கும்படி செய்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு வண்ணங்களை கவினுற காட்டியுள்ளது. ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். மாறாவின் ஓவியங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் காண்பதற்கு அருமையாக உள்ளது.குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சார்லியை பார்த்து சலித்து போனவர்கள் கூட மாறாவை விரும்பும் வகையில் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் திலீப் குமார்.சார்லியின் கதாபாத்திரம் போன்று இல்லாமல் மாறா ஏன் அப்படியானார் என்று விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளனர்.

மகிழ்ச்சியாக ஊர் சுற்றும் வாலிபனாக இல்லாமல் மாறா உள்ளுக்குள் வருத்தமாக இருக்கிறார். மாறா இவ்வாறு இருக்க ஒரு காரணம் இருக்கிறது. சார்லியிடம் எந்த வருத்தமும் இருக்காது.துல்கர் சல்மானை விட வயதில் மூத்தவரான மாதவன் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ இப்படி ஒரு மாற்றம் தேவைப்பட்டு இருக்கிறது.ஆனால் வயதில் மூத்தவராக இருந்தாலும் துல்கருக்கு இணையாக சார்மிங்காக இருக்கிறார் மாதவன்.

பார்வதி, மாறா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் கதை தடம் மாறிப் போகும் போது பார்வதி-மாறா ரொமான்ஸ் ஓரம் கட்டப்படுகிறது. அதனால் ஆரம்பத்தில் கிடைக்கும் அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் இறுதிவரை இல்லை.சார்லி சார்லி தான், மாறா மாறா தான். இரண்டு பேருமே மனதை கொள்ளை கொள்பவர்கள்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி. 

Tags: | latest news | trending news |  celebrity news in Tamil | day to day updates |  cinema news in Tamil | interesting news in Tamil | madhavan news | shradha news | actor news in tamil | maara movie updates| best movie updates |