அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்...

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்....

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதன் தொடர்பாக வெளிவந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளது யாதெனில் ,"அஞ்சல்  துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

கண்ணகர் பதவிகளுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பல மாநில மொழிகளில் நடத்த வேண்டும்.அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும்வரை இந்த தேர்வை நடத்த கூடாது எனவும் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த அறிவிப்பிலும் இதுபோலவே ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தேர்வு என அறிவித்தது.அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனையும் மீறி அந்த தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கான சரியான விடையை மத்திய அரசு வெளியில நிலை மற்ற மொழிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை தராமல் போவதாக குற்றம் சாட்டப்படுகிறது .

இதற்கான தேர்வு நடைபெற கூடாது என  அவசர வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.தபால் துறையில் அஞ்சலர் உள்பட  4 வகையான தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.கடந்த ஆண்டு இந்த  தேர்வு தமிழ் உள்ளிட்ட 5 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் , தேர்வு நடைபெற 3 நாள்கள் இருந்த நிலையில்,அதாவது ஜூலை 11 ம் தேதி  தபால் துறை  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் ,தபால் தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ,மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அனைத்து தகவல்களையும் தினம் ஒரு தகவல் மூலம் நடப்பு செய்திகளை எளிதாக அறிந்து கொள்ளலாம்.


 Tags: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa | interesting news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | job offer | post office exam |