தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ..சர்க்கரை நோயாளிகள் கொய்யாபழம் சாப்பிடலாமா ?

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை வெகுசிலர் அறியமாலே விட்டுவிட்டனர். ஆனால் உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.


உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் உடலுக்கு வழங்குகிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதில்லை.

கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் (Glycemic Index) குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன. குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

கொய்யா குறைவான கலோரி கொண்டவை என்பதால் இது எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது. அதிக எடை என்பது ரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கு காரணம் ஆகும்.

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. நார்ச்சத்து இல்லாத உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


 Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil.