ஏர்டெல் வருவாய் உயர்வு!!

ஜியோ வந்த பிறகு ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வந்த ஏர்டெல் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி எண்ட்ரி. அதனால் ஏர்டெல் பெரும் இழப்புகளைச் சந்தித்தது.மற்ற நெட்வொர்க் சந்தாதார்கள் ஜியோவுக்கு மாறத் தொடங்கியதால் சில நெட்வொர்க் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. ஐடியாவும் வோடஃபோனும் வேறு வழியில்லாமல் ஒன்றிணைந்தன. இவ்வாறாக, அதிவிரைவில் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது.


ரூ.23,045 கோடி இழப்பை இந்நிறுவனம் சந்தித்திருந்தது. சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏர்டெலின் இழப்பு ரூ.763 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த இழப்பானது ஏப்ரல் - ஜூன் காலாண்டு இழப்பை விடக் குறைவுதான். ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாயைப் பொறுத்தவரையில், 22 சதவீத உயர்வுடன் ரூ.25,785 கோடி கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மந்தமான செயல்பாடுகள் இருந்தாலும் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் குறிப்பிடும்படியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கோபால் விட்டல் கூறியுள்ளார்.

ஏர்டெல் நெட்வொர்க்கின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை ஜியோவை விட அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியது. ஜூன் மாதத்தில் ஜியோவில் 8.7 கோடி ’இன் ஆக்டிவ்’ யூசர்கள் இருந்ததாகத் தெரியவந்தது. ரிலையன்ஸ் ஜியோவின் மொத்தமுள்ள 39.7 கோடி வாடிக்கையாளர்களில், சுமார் 8.7 கோடி வாடிக்கையாளர்கள் ஆக்டிவ்வாக இல்லை என்று அந்த ஆய்வு கூறியது. இந்த விஷயத்தில் ஏர்டெல் நெட்வொர்க் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஏர்டெல் நெட்வொர்க்கில் 37 லட்சம் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் ஜூன் மாதத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் 21 லட்சம் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் வெளியேறியிருக்கிறார்கள். இதன் மூலம் ஆக்டிக் யூசர்கள் பிரிவில் ஜியோவை விட ஏர்டெல் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil