இனி யார் வேண்டுமானாலும் சந்தனமரம் வளர்க்கலாம்????

சந்தனம் மரம் 


உங்கள் நிலத்திலும் சந்தன மரம் வளர்க்கலாம் சட்டம் அனுமதிக்கிறது...

   தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை…


மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

 சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.

சந்தன மர அமைப்பு தொகு


சந்தன பூக்கள்

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.

வளரும் இடம் தொகு

இதன் தாயகம் இந்தியா[சான்று தேவை]. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.[2] இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.


 முன்பெல்லாம் மஞ்சள் நிற, சிவப்பு நிற சந்தன மரங்களைத் தமிழ்நாட்டில் பட்டா நிலங்களில் விவசாயிகள் வளர்க்கவும், பிறகு வெட்டுவதற்கும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்திருந்தது. ஆனால், 27.11.2008 அன்ற தமிழ்நாடு அரசு ஆணை எண். 140ஐ வெளியிட்டது. அதன்பின் சந்தன மரங்களைப் பட்டா நிலங்களில் விவசாயிகள் வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால் நட்ட பின், தங்கள் நிலம் உள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் மனுச் செய்து கிராமக் கணக்கில் ஏற்ற வேண்டும். பின் சிறிது நாளில் பத்திரம், பட்டாவைக் காட்டி, சிட்டா, அடங்கலை (நகல்) வாங்க வேண்டும். அதில் எத்தனை மரங்கள் உங்கள் நிலத்தில் உள்ளனவோ, அந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்.

 பின் சில ஆண்டுகளில் (10 ஆண்டுகளுக்கு பின்) மரங்கள் நன்கு வளர்ந்துவிடும். அதுவரை பாதுகாப்பாக வளர்த்து வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் என்ன பயிர் விவசாயம் செய்கின்றனர், என்ன மரம் உள்ளது என கணக்கெடுத்து ச.எண்.படி கிராமக் கணக்கில் ஏற்றுவார்கள். 

எனவே, உங்களது நிலத்தில் சந்தன மரங்கள் உள்ளன என்பது கிராம அரசு ரிக்கார்டுகளில் இருக்கும். எப்போது சிட்டா, அடங்கல் கேட்டாலும் எத்தனை சாதாரண சந்தன மரங்கள் உள்ளன? எத்தனை மஞ்சள் நிறச் சந்தன மரங்கள் உள்ளன, எத்தனை இதர மரங்கள் உள்ளன என எழுதிச் சான்று கொடுப்பார்.

  நன்கு வளர்ந்தபின் விவசாயி தன் மரங்களை (சந்தனம்) வெட்டி தானே தன் விருப்பப்படி விற்கக்கூடாது. விற்க முடியாது. ‘தமிழ்நாடு சந்தன மரங்கள் பட்டா நிலத்தில் விதிகள் 2008’ மேற்படி அரசு ஆணையில் உள்ளது. 

தமிழ்நாடு வனச் சட்டம் 1882ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தன் பட்டா நிலத்தில் நன்கு வளர்ந்துள்ள சந்தன மரங்களை வெட்டி அரசுக்கு விற்க கீழ்க்கண்ட சான்றுகளுடன் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு மனுக் கொடுக்க வேண்டும். 

1) தாசில்தார் வழங்கிய உரிமையாளர் (நிலம்) சான்று (Patta / Certificate of Ownership)

2) சிட்டா / அடங்கலின் நகல்

3) பட்டா நில வரைபடம்

4) குத்தகை நிலமானால் அதற்குரிய ஆவணம்

5) அந்த நிலத்தில் விற்பனைக்கு உள்ள சந்தன மரங்களின் எண்ணிக்கை

நிலத்தைப் பார்வையிட்டபின் 10% மரங்களை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அடைந்ததும் மேற்படி மரங்களை அரசுக்கு விற்க அனுமதி வழங்குவார். அதன்பின் மரங்கள் வெட்டப்பட்டு, அரசு அதிகாரிகள் முன்னிலையில் அரசு டெப்போவில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின் அதற்குரிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஏலம் விட்டு அரசு விற்பனை செய்யும். மொத்த விற்பனை விலையில் 10% போக்குவரத்து போன்ற செலவுக்கும், 10% நிர்வாகச் செலவுக்கும் அரசு எடுத்துக்கொள்ளும்.

பின் 90 நாட்களுக்குள் அந்தத் தொகையை மாவட்ட வன அலுவலர் விவசாயிக்கு வழங்குவார். விலையை நிர்ணயம் செய்வதில் ஆட்சேபனை இருந்தால் மேல் அதிகாரிகளிடம் அப்பீல் செய்யலாம். இதுதான் அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் பயிர் செய்து, சந்தன மரங்களை வளர்த்து நல்ல விலைக்கும் விற்றுப் பயன் பெறலாம்.

இது ஒரு ஒட்டுண்ணி வாழ்வு மரம் எனலாம் அடுத்த மரத்தின் வேர் முடிச்சுகள் மூலம் சில சத்துக்களை எடுத்து கொள்கிறது  இந்த மரங்களின் பக்கத்தில் எழும்பிச்சை கொய்யா சப்போட்டா போன்ற மரங்கள் வைத்து வளர்க்கலாம்

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil