தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரகசியம் தெரிய வந்தது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். 45 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என்று வியப்பவர்கள் பலர் உள்ளனர்.கொரோனா லாக்டவுன் நேரத்தில் மகேஷ் பாபுவின் புகைப்படத்தை அவரின் மனைவி நம்ரதா ஷிரோத்கர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார்.அந்த புகைப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.இதனை வயதிலும் அழகும் பொலிவும் இழக்காமல் உள்ளாரே எனவும், பெண்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பளபளவென்று இருக்கிறாரே என்று அவரின் ரசிகைகள் கூறுவது உண்டு.மகேஷ் பாபு தோல் பளபளப்பாக இருக்க என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகைகள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் டாக்டர் ரஷ்மி ஷெட்டி தான் தன்னுடைய ஸ்கின்கேர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறி அவரின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்திருந்தார் மகேஷ் பாபு.அதை பார்த்த ரஷ்மி ஷெட்டி மகிழ்ச்சியில் மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.ரஷ்மி ஷெட்டி மும்பை மற்றும் ஹைதராபாத்தில்  க்ளினிக் வைத்திருக்கின்றார்.பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,நடிகைகள் ஸ்ருதி ஹாசன், நர்கிஸ் ஃபக்ரி ஆகியோரின் ஸ்கின் டாக்டராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்கள் ரஷ்மியிடம்,மகேஷ் பாபுவின் ஸ்கின்கேர் மீது அக்கறை செலுத்துவதற்கு நன்றி என்று கூறியுள்ளனர்.தான் இந்த வயதிலும் இளமையாக இருக்க தன் அழகான பெற்றோர், ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் தான் காரணம் என்று மகேஷ் பாபு ஏற்கெனவே  பலமுறை கூறியுள்ளார்.அவர் தன் வீட்டிலேயே ஜிம் வைத்துள்ளார்.தினமும் ஒர்க்அவுட் செய்கிறாராம்.மேலும் உணவு விஷயத்திலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கின்றார்.

மகேஷ் பாபு படங்கள் ரிலீஸானால் ரசிகைகள் தியேட்டர்களுக்கு படையெடுத்து செல்வர்.அதை பார்க்கும் ரசிகர்களோ,மகேஷ் பாபுவை சைட் அடிக்கத் தான் இந்த ரசிகைகள் எல்லாம் செல்கிறார்கள் என்று கூறும் அளவிற்கு கூட்டம் அலைமோதும்.கெரியரை பொறுத்த வரை 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் ஷூட்டிங்கிற்காக தயாராகி வருகின்றார் மகேஷ் பாபு.படப்பிடிப்பு துபாயில் நடக்கவிருக்கிறது.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags:  latest news | trending news |  celebrity news in Telugu | daily updates |  cinema news in Telugu | interesting news in Telugu |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | mahesh babu updates | telugu movie updates |